Sunday, February 6, 2011

என் தொட்டில்

பெற்றெடுக்கும் பிள்ளையை விட்டெறியும்
வள்ளுவனின் தந்தை போல் நேற்று வரை வாழ்ந்தேன்
அவற்றை தத்தெடுத்து போடத்தான்
இந்த தொட்டிலை வாங்கினேன்

திருடன்

கவிஞன் உணர்வுகளின் திருடன்
இயற்கை எனும் பிரபஞ்சத்தில்
உணர்வு எனும் உயிரை திருடி
கவிதை எனும் உடம்பில் ஏற்றி
படைக்கும் பிரம்மா......................
திருடும் உரிமையை யார் கொடுத்தார் இவனுக்கு.............

பிரம்மா

பிரம்மா ஆணா பெண்ணா என்றால் ? பெண் என்பேன் ..........................!
பெண்ணால் தான் படைக்கமுடியும் என்பதால்

கவிதை

என் கவிதைகளை நான் சேமித்தது இல்லை
என்னோடு அவை வாழ்ந்தும் இல்லை
அதுகாய் அவை இறந்திடவும் இல்லை
கவிதை எனும் உடம்புக்குள் .........
அகப்படாத உணர்வாய் காத்திருக்கின்றன
அடுத்த கவிஞனின் வருகைகாய் .........