Sunday, March 20, 2011

இனிக்கும் காதல்

உடலுக்குள் உயிர் இருந்து எனை இயக்கும்
உயிருக்குள் எது இருந்து அதை இயக்கும்
.........................................................................................
காதலின் ஆழம் உயிர் வரை என தெரிந்திருந்தேன்
என் உயிர் இயக்கும் உயில் காதல் என்று புரிந்துகொண்டேன்
...............................................................................................................
இந்த விந்தை அறிந்த்ததால்
காதலியை தொலைத்த பின்னும் காதல் இனிக்கிறதே
..........................................................

Saturday, March 19, 2011

காதல்

உயிரில் படரும் கொடி......காதல்
என அறிந்திருந்தேன் ........ஆனால்
என் உயிரின் ஆணிவேர் அது ...........என
புரிந்துகொண்டேன் ...............காதல்
ஒரு கடவுள் என ஏற்றுக்கொண்டேன்
காதலே ஜெயம் .


Monday, March 14, 2011

யாப்பிலகணம் 5

"ம்" ஜ நாங்கள் ஒலிக்கையில்
வாயின் அசைவு பூச்சியமாம்
"அ","ஆ" என்று புகழ்கையில்
ஒருபடி மேலாம்
"அம்மா" என்று அணைக்கையில
"அம்" உடன் "மா" இணையுமாம்

............................................................................

ஓர் எழுத்துக்கு அசை தனி என்றும்
ஈர் எழுத்துக்கு அசை இணை என்றும்
இலக்கணம் கண்டார் இலக்கியத்தில்

அதனால் .............................

குறில்,நெடில்,குற்றொற்று,நெட்டொற்று
கொள்ளும் நேர் அசைவை
குறிலிணை,நெடிலிணை,குறிலிணையொற்று,நெடிலிணையொற்று
எடுக்கும் இணை அசைவை

இதுதான் அசை இலக்கணம் என்பார் பெரியோர் !



YAAPILAKANAM

Wednesday, March 2, 2011

யாப்பிலக்கணம் 4

மனித புணர்சியின்
வகை இரண்டு
இனம் இரண்டு
எனவே 2!(factorial)
.........................
எழுத்து புணர்சியின்
வகை ஆறு
இனம் மூன்று...............(குறில்,நெடில்,ஒற்று)
எனவே 3!
..........................
குற்றும் ஒற்றும
ஒதுங்கி பிறப்பது
குற்றொற்று
"க" வும் "ல்" லும் கல் லை தரும்
.......................
நெடிலும் ஒற்றும
நெருங்கி பிறப்பது
நெட்டொற்று
"கா" வும் "ல்" கால் லை தரும்
...........................
குறிலும் குறிலும்
குலவ கிடைப்பது
குறிலிணை
"க" வும் "ட"வும் கட வை தரும்
........................
குறிலும் நெடிலும்
நெடுக புனைந்து
குறினெடிலை தரும்
"க" வும் "டா"வும் கடா வை தரும்
..............................
குறிலிணையுடன் ஒற்று
சேர
குறிலிணையொற்று வரும்
"கட" வுடன் "ல் " சேர கடல் வரும்
..............................
குறினெடிலுடன் ஒற்று
உறவ
குறிநெடிலொற்று
"கடா" வுடன் "ம்" சேர கடாம் வரும்
.....................................




Tuesday, March 1, 2011

யாப்பிலக்கணம் 3

மௌனம் பேசிய மனிதன்
பேசிய முதல் மொழி ஓசை
.............................
ஆதி மொழி தமிழ் என்பேன்
அது ஓசை சுட்டி அறியப்படுவதால்
..............................
தமிழில் எழுத்து ‍247

ஓங்கி ஒலிக்கும்
நெடில் 133
கா கீ கூ கே கை கௌ வகையாம்
.............................
குறுகி குழய
குறில் 95
க கி கெ கொ வகையாம்
...........................
க்கி பேச
ஆயுதத்துடன் மெய்யும் சேர்ந்து
ஒற்று 19
க் ச் ட் .........ஃ வகையாம்
...........................
ஆக மொத்தம்
கூட்டி பாரும் கணக்கு சரி
.........................
பொருளுக்கு ஓசை கொடுக்க
அது தமிழ் ஆகும்
தமிழ் ஆனாலே
அது கவியாகும்
இது தான் நான் கற்ற
முதல் கவி இலக்கணம்
....................


Monday, February 28, 2011

அமிர்தம்

தேவை முடிந்தும்
தேடும் இதயம்
தேவ சுகத்திலும்
இனிய அமுதம் !

Sunday, February 27, 2011

காதலிக்கிறேன்

எனை மறந்த நிலையில்
உன்னை நினைத்தேன்
உன்னை மறந்த நிலையில்
காதல் நினைத்தேன்
காதல் மறந்த நிலையில்
காமம் நினைத்தேன்
காமம் மறந்த நிலையில்
கூட நினைத்தேன்
கூடல் மறந்த நிலையில்
உன்னை மறந்தேன் எனை மறந்தேன்
உலகை மறந்தேன்
எல்லாம் மறந்தபோதும்
எம் இதயம் இரண்டும்
இணைந்து இருப்பதாய் கண்டேன்
எனவே நான் உன்னை காதலிக்கிறேன்!

Tuesday, February 22, 2011

கவிக்களம்: யாப்பிலக்கணம் 2

கவிக்களம்: யாப்பிலக்கணம் 2

Monday, February 21, 2011

கவிக்களம்: வரம்

கவிக்களம்: வரம்

யாப்பிலக்கணம் 2

மரபு இலக்கணத்தை
புது கவி வடிவில் தரும்
ஒரு புது முயற்சி
நான் தொடர்வேன்
தொடருவோரையும் தேடுவேன்.........

என் வீட்டு பெண் ஒன்று
பூத்து விட்ட செய்தி கேட்டு
பூரித்தேன் அடுத்து என்ன
பூ முடிந்து பொட்டு வைத்து
பட்டாடை அது போட்டு
பொன் பூட்டி
கல்யாண சந்தையில்
கடைவிரித்து காத் திருப்பேன் வேறு என்ன !

அது போல் எனுள்ளே
வளர்ந்த கரு
உருவெடுத்து கவியாகி
தன்னுள்ளே துளிர்விட்டு
மனக்கதவு வழியாய்
கண்ணடிக்க யார் வருவார்
கை பிடிக்க யார் வருவார்
கரம் கொடுக்க யார் வருவார் என்று
எட்டிப்பார்கிறது ...........அடுத்து என்ன
முதல் வேலை உறுப்பை சரி பார்க்க
எழுத்து,அசை ,சீர் ,தளை,அடி ,தொடை
என ஜந்தும் மெத்தென பொருந்தி
சத்தென நிற்க பார்த்து
எனெனில்
இலக்கணம் எனும் இலட்சணம்
தரும் கடமை எம் தலையில் உண்டாம் .............தொடரும்.

.










Sunday, February 20, 2011

கவிக்களம்: பதுக்கும் விலங்கு

கவிக்களம்: பதுக்கும் விலங்கு

பதுக்கும் விலங்கு

அடங்காத வரை நான் கவிஞன் ஆகிறேன்
அடங்கிய பின் நான் கழுதை அகிறேன்
வாழ்கையில் நான் ஓட நினைக்கிறேன்
ஓட முன் பாடநினைக்கிறேன்
பாடிய பின் பணத்தை பார்க்கிறேன்
பணத்தை கண்டதும்
பதுங்க நினைக்கிறேன்
பதுங்கிய பின் பதுக்க நினைக்கிறேன்

மனிதன் பணத்துக்குள்
உணர்வை பதுக்கும் விலங்கு!

கவிக்களம்: யாப்பிலக்கணம் 1

கவிக்களம்: யாப்பிலக்கணம் 1

கவிக்களம்: ஆன்மீக சர்வாதிகாரி

கவிக்களம்: ஆன்மீக சர்வாதிகாரி

கவிக்களம்: காதலர் தினம்

கவிக்களம்: காதலர் தினம்

புது கவிஞ்ஞன் ... புரட்சி கவிஞ்ஞன்

வாய்த்த தமிழ் அத்தனையும் வாய் புகழாய் போகட்டும்
விட்ட தமிழ் வீண் கதையாய் போகட்டும்
அன்னை தமிழ் கவி நான் உரைத்தால்
அற்ற தமிழ் என்று விட்ட யாப்பில் வைப்பீர் என்றால்
கொற்ற தமிழில் நான் சொல்வேன்
குனிந்து நீர் படுமென்று

ஆன்மீக சர்வாதிகாரி

ஆயுதத்தால் எனை அடக்கியவன்
ஆயுத சர்வாதிகரி
ஆன்மீகத்தால் என்னை அடக்குபவர்
ஆன்மீக சர்வாதிகாரி
மயக்குவதும் மந்திரிப்பதும்
பொல்லா பாவம்

ஆண்டவனே எமை அடக்க நினைபதிலை
அவனுள் நாம் அடங்கியதும்
அடங்கியவரை அவன் அழிப்பதும் இல்லை !



Tuesday, February 15, 2011

காதலர் தினம்

காதல் யாரையும் பிரிவதில்லை
யாரும் காதலை பிரிவதில்லை
ஆனால் காதலி தான் கிடைப்பதில்லை
அதனால் காதலர் தினம் முடியவில்லை...........!

Sunday, February 13, 2011

வரம்

பிறபின் போது இறைவன் தந்த வரம் ......மரணம்
அது புரியாமல் போடுவார் ஆட்டம்
அது புரிந்தவரும் போடுவார் ஆட்டம்
சொக்கநாதன் ஆடவிட்டால் சுற்றிடுமா பூமி
ஆடுவது எம் கடமை
ஆட்டுவிப்பது அவன் கடமை
இதில் மரணிப்பது என்னவோ
மயக்கம் தான்
உயிர்ப்பது நாம் தான்........................!

அன்று நாம் காண்போம் இறைவனை எம்முள் !