Monday, February 21, 2011

கவிக்களம்: வரம்

கவிக்களம்: வரம்

யாப்பிலக்கணம் 2

மரபு இலக்கணத்தை
புது கவி வடிவில் தரும்
ஒரு புது முயற்சி
நான் தொடர்வேன்
தொடருவோரையும் தேடுவேன்.........

என் வீட்டு பெண் ஒன்று
பூத்து விட்ட செய்தி கேட்டு
பூரித்தேன் அடுத்து என்ன
பூ முடிந்து பொட்டு வைத்து
பட்டாடை அது போட்டு
பொன் பூட்டி
கல்யாண சந்தையில்
கடைவிரித்து காத் திருப்பேன் வேறு என்ன !

அது போல் எனுள்ளே
வளர்ந்த கரு
உருவெடுத்து கவியாகி
தன்னுள்ளே துளிர்விட்டு
மனக்கதவு வழியாய்
கண்ணடிக்க யார் வருவார்
கை பிடிக்க யார் வருவார்
கரம் கொடுக்க யார் வருவார் என்று
எட்டிப்பார்கிறது ...........அடுத்து என்ன
முதல் வேலை உறுப்பை சரி பார்க்க
எழுத்து,அசை ,சீர் ,தளை,அடி ,தொடை
என ஜந்தும் மெத்தென பொருந்தி
சத்தென நிற்க பார்த்து
எனெனில்
இலக்கணம் எனும் இலட்சணம்
தரும் கடமை எம் தலையில் உண்டாம் .............தொடரும்.

.