Sunday, March 20, 2011

இனிக்கும் காதல்

உடலுக்குள் உயிர் இருந்து எனை இயக்கும்
உயிருக்குள் எது இருந்து அதை இயக்கும்
.........................................................................................
காதலின் ஆழம் உயிர் வரை என தெரிந்திருந்தேன்
என் உயிர் இயக்கும் உயில் காதல் என்று புரிந்துகொண்டேன்
...............................................................................................................
இந்த விந்தை அறிந்த்ததால்
காதலியை தொலைத்த பின்னும் காதல் இனிக்கிறதே
..........................................................

Saturday, March 19, 2011

காதல்

உயிரில் படரும் கொடி......காதல்
என அறிந்திருந்தேன் ........ஆனால்
என் உயிரின் ஆணிவேர் அது ...........என
புரிந்துகொண்டேன் ...............காதல்
ஒரு கடவுள் என ஏற்றுக்கொண்டேன்
காதலே ஜெயம் .


Monday, March 14, 2011

யாப்பிலகணம் 5

"ம்" ஜ நாங்கள் ஒலிக்கையில்
வாயின் அசைவு பூச்சியமாம்
"அ","ஆ" என்று புகழ்கையில்
ஒருபடி மேலாம்
"அம்மா" என்று அணைக்கையில
"அம்" உடன் "மா" இணையுமாம்

............................................................................

ஓர் எழுத்துக்கு அசை தனி என்றும்
ஈர் எழுத்துக்கு அசை இணை என்றும்
இலக்கணம் கண்டார் இலக்கியத்தில்

அதனால் .............................

குறில்,நெடில்,குற்றொற்று,நெட்டொற்று
கொள்ளும் நேர் அசைவை
குறிலிணை,நெடிலிணை,குறிலிணையொற்று,நெடிலிணையொற்று
எடுக்கும் இணை அசைவை

இதுதான் அசை இலக்கணம் என்பார் பெரியோர் !



YAAPILAKANAM

Wednesday, March 2, 2011

யாப்பிலக்கணம் 4

மனித புணர்சியின்
வகை இரண்டு
இனம் இரண்டு
எனவே 2!(factorial)
.........................
எழுத்து புணர்சியின்
வகை ஆறு
இனம் மூன்று...............(குறில்,நெடில்,ஒற்று)
எனவே 3!
..........................
குற்றும் ஒற்றும
ஒதுங்கி பிறப்பது
குற்றொற்று
"க" வும் "ல்" லும் கல் லை தரும்
.......................
நெடிலும் ஒற்றும
நெருங்கி பிறப்பது
நெட்டொற்று
"கா" வும் "ல்" கால் லை தரும்
...........................
குறிலும் குறிலும்
குலவ கிடைப்பது
குறிலிணை
"க" வும் "ட"வும் கட வை தரும்
........................
குறிலும் நெடிலும்
நெடுக புனைந்து
குறினெடிலை தரும்
"க" வும் "டா"வும் கடா வை தரும்
..............................
குறிலிணையுடன் ஒற்று
சேர
குறிலிணையொற்று வரும்
"கட" வுடன் "ல் " சேர கடல் வரும்
..............................
குறினெடிலுடன் ஒற்று
உறவ
குறிநெடிலொற்று
"கடா" வுடன் "ம்" சேர கடாம் வரும்
.....................................




Tuesday, March 1, 2011

யாப்பிலக்கணம் 3

மௌனம் பேசிய மனிதன்
பேசிய முதல் மொழி ஓசை
.............................
ஆதி மொழி தமிழ் என்பேன்
அது ஓசை சுட்டி அறியப்படுவதால்
..............................
தமிழில் எழுத்து ‍247

ஓங்கி ஒலிக்கும்
நெடில் 133
கா கீ கூ கே கை கௌ வகையாம்
.............................
குறுகி குழய
குறில் 95
க கி கெ கொ வகையாம்
...........................
க்கி பேச
ஆயுதத்துடன் மெய்யும் சேர்ந்து
ஒற்று 19
க் ச் ட் .........ஃ வகையாம்
...........................
ஆக மொத்தம்
கூட்டி பாரும் கணக்கு சரி
.........................
பொருளுக்கு ஓசை கொடுக்க
அது தமிழ் ஆகும்
தமிழ் ஆனாலே
அது கவியாகும்
இது தான் நான் கற்ற
முதல் கவி இலக்கணம்
....................


Monday, February 28, 2011

அமிர்தம்

தேவை முடிந்தும்
தேடும் இதயம்
தேவ சுகத்திலும்
இனிய அமுதம் !