Sunday, February 8, 2009

எழுவோம்!வருவோம்!வெல்வோம்!


நாம் கதறி அழும் ஓலம்குண்டு சத்தமாய் மாறும்......
எம் கண்ணீரின் வெள்ளம்சுனாமியாய் சீறும்.......
சாயும் எங்கள் சாவுகள் கலானாய் மாறும்............
கனக்கும் எம் நெஞ்சங்கள்
கல்நெஞ்சாய் போகும்........
அப்போது ஓயாத எங்கள் அலை
உனைக் காவு கொளும்........
எயியி ......................
கனவுகாணும் உன் கனவு
கனவாகவே போகும்.....

எழுவோம்!வருவோம்!வெல்வோம்!

தவிக்கும் தமிழ் அம்மா

அமாவாசை இரவும் முன்றாம் பிறை நிலவும்
என் வாசல் வந்தால்சூரியன் எனக் காட்டுவேன் மகனே!..............
இருளை விட இருண்ட என் வாழ்வில் என்ன கதை இருக்கும் ?
ஓட்டை வீட்டு சாளரங்கள் திறந்திருக்கு
கோட்டை வீட்டு கதவுகள் காத்திருக்கு
வெளிசம் மட்டும் வரவில்லை ஏனோ?...............
சூரியனை கடத்தும் நிலவுகே தடை இங்கு!
சூரியன் இங்கு வேண்டாம்
அம்மாவாசை வந்தாலே போதும்
நிலாசொறு நான் ஊட்ட வருமா?
சூரிய உதயமும் பொர்ணமி நிலவும் வேண்டி
தவிக்கும் தமிழ் அம்மா

கண் சொலும் அன்பில்...........

உறவுகளை பல முறை பிரிந்தபோது
கண்களில் கசிவும் நெஞ்சினில் புரியாத தவிப்பும் வந்ததில்லை
காதலே உன்னை ஒரு முறை பிரியும் போது வந்ததே ஏன்?
விடை உன் கண் சொலும் அன்பில்...........