Sunday, February 13, 2011

வரம்

பிறபின் போது இறைவன் தந்த வரம் ......மரணம்
அது புரியாமல் போடுவார் ஆட்டம்
அது புரிந்தவரும் போடுவார் ஆட்டம்
சொக்கநாதன் ஆடவிட்டால் சுற்றிடுமா பூமி
ஆடுவது எம் கடமை
ஆட்டுவிப்பது அவன் கடமை
இதில் மரணிப்பது என்னவோ
மயக்கம் தான்
உயிர்ப்பது நாம் தான்........................!

அன்று நாம் காண்போம் இறைவனை எம்முள் !

இறைவா

வரம் கொடுக்கும் ஆற்றல் இல்லை என்றால்
உன்னை புகழ்வார் உண்டோ உலகில்...........
வாழ்த்தொலிக்கு மயங்கி வரம் தருவாய் என்றால்
நீயும் சுயநல உலகின் சூழ்ச்சியில் சிக்கிய மானிடமே..........இறைவா

முற்றும் அறிந்தவன் நீ என்றால் .............எதற்காய்
முற்றும் திறந்தவரை இங்கு படைத்தாய் ..........அவர்
உலகில் சிக்கி மடியும் வரை.................. ஏன்
வரம் வேண்டி கையேந்த வைத்தாய்................

உன் வர அறையை பூட்டிவைத்துகொள்............அன்றேல்
இறை பக்தர்களை விட
இறை கள்வர்கள் வாழும் பூமி நீ காண்பாய்
சாவியை முடிந்தால் என்னிடம் தந்துவை





சர்வாதிகாரி

யார் சர்வாதிகாரி ?
தனக்காய் பலரை அடக்கும்
கிட்லரா? முசோலினியா ?.........
தன்னுள் எனை அடக்கும்
மனவியா ?
புலனை அடக்க தெரிந்த
முனிவனா ?
யார் சர்வாதிகாரி ?


முனிவர்

முற்றும் திறந்தவர் என்பர்
வரம் சாபம் அள்ளிக் கொடுப்பர்
இல்லாதவர் எப்படி கொடுப்பார்?
அன்றேல் இருப்பதை திறகின்றாறோ!

யாப்பிலக்கணம் 1

பேரிகை அடித்து
மும் முரசு முழங்கி
வாழ்த்தொலி பாடி
பெரியோர் எனை - கவிஞர்
என்றாலும்
என் காது ஏற்காது
யாப்பிலக்கணம் கைவரும்வரை
அதற்காய் என் வாய்
கவி பாடாது விடாது

நந்தத்தனார்,நல்லாதனார்
அவியனார்,பல்காயனார்
கையனார் , மயேச்சுரனார்
பரிமானார்,வாய்பியனார்
காக்கைபாடியினார்,சிறுகாக்கைபாடியினார்
இவருடன் இலக்கணம் வகுத்த
முனைவர் பலரின் பாதம் பணிந்து

சங்கயாப்பு,பெருயபம்மம்,நாலடி நாற்பது
செயிற்றியம் இன்னும் பல நூல்களை வணஙகி
என் யாப்பிலக்கணத் தேடல் ....................................................................தொடரும்.

பொறுப்பீரே

இலக்கணம் கற்று
இலக்கியம் படைக்கும்
இனியவர் நல்லோர்
தேவியின் அருளால்
தெளிக்கும் என் வரிகள் பொறுப்பீரே....................

நட்பு

உடல் அறுத்து உயிர் தேடும்
உறவறுத்து உனை தேடும்
கடமை அறுத்து உரிமை தேடும்
காதல் நட்பு.....................................!